தாராளமாக முடியும்
மாதம் பங்கில் நீங்கள் போடும் ருபாய் 3000 என்றே வைத்து கொள்ளுங்கள்
1. பென்னி ஸ்டாக் - மிகவும் சிறிய ரூபாய் வாங்கி விற்கும் பங்குகள். இதில் ரிஸ்க் அபாயம் மிக அதிகம்!
ஆனால் இதை பற்றி ஒரு மாதம் படித்து இரட்டிப்பு முதல் 10 20 மடங்கு கூட லாபம் பெற்றவர்கள் உள்ளார்கள்.
2. முதலீடு - இன்வெஸ்ட்மென்ட் என்கிற இந்த விஷயம் தான் ஒரு செல்வந்தரை உருவாக்கும்.
வாரன் Warren Buffett போன்ற தலை சிறந்த ஜாம்பவான்களும் தன்னை இன்வெஸ்ட்டர் என்கிற முதலீட்டாளர்கள் என்றே குறிப்பிடுகின்றனர்.
இதற்கு பேர் போன ப்ளூ சிப் பங்கு, ஆட்டோ (வாகன) பங்கு, பெயிண்ட் வகைகள், சிமெண்ட் போன்ற பங்குகள் மிக அதிக லாபம் ஈட்டும்.
உதாரணம் என் செல்லம் என்றே எப்போதும் நான் பார்க்கும் "MRF" பங்கு. இவர்கள் டிவிடெண்ட் கொடுப்பதில் மகா கஞ்சர்கள் என்றாலும். லாபம் ஈட்டுவதில் MRF /Eicher/Dalmia Bharat Cement போன்ற பங்குகள் வேற லெவல்
தங்கம் வைரம் விலை மா ! ஒரு பங்கு சில சமயத்தில்.
2016 நேரத்தில் ஒரு ஜூன் மாதம் MRF 30000 துக்கு சரிந்து விட்டது. ரெட் நிறத்தில் எல்லா இடத்திலும். அப்போதெல்லாம் எனக்கோ கணக்கில்லா செலவு. குடும்ப கஷ்டங்கள் மிக அதிகம்.
நீங்கள் நம்ப மாட்டீர்கள் ..? கையில் இருந்த 90-95 சதவிகித பணம் போட்டு வாங்கினேன்.
பிற்காலத்தில் அதே MRF அடுத்த வருடம் 85000 த்தை தாண்டியது
ஆக மிகவும் பேர் போன பங்குகளில் முதலீடு செய்ய சிறந்த கரடி எனப்படும் பேர்(Bear) மார்க்கெட்டுக்கு காத்து கொண்டு உள்ளே இறங்கவும்
டே டிரேடிங் - இதற்கு தின வர்த்தகம் 5-10 பங்குகள் உங்களுக்கு வரும் செக்டரில் பார்த்து பார்த்து பழகி ஒரு நாளில் வாங்கி விற்க பல இடங்களில் ட்ரைனிங் கூட பயிற்சி தருகிறார்கள்.
இதில் ஒரு நாளில் சில ஆயிரங்களை ஈட்டவும் முடியும். ரிஸ்க் அதிகம் என்பதால் சரியாக தெரியாது, எமோஷனல், யோசிக்காமல் எடுக்கும் முடிவு என்றால் எல்லா காசும் அம்பேல் ஆகும் வாய்ப்பும் அதிகம்.
சாதாரண வர்த்தகம் (டிரேடிங்) - சில ஸ்மால் காப் மற்றும் perishable போன்ற சிறிய வகை சாப்பாடு பங்குகள், FMCG பங்குகள், சக்கரை, உப்பு, ஆடை அலங்கார பங்குகள், போன்ற சிறிய வகை பங்குகள் டிரேடிங் இல் மிக அதிகம் லாபம் 15 நாள் முதல் 3 மாதத்தில் கூட கொடுக்கும். உதாரணம் பலரம்புர் சீனி மில்ஸ் போன்ற பங்கு
நம் தேவை, நம்முடைய அபாயத்தை ஏற்கும் தன்மை (ரிஸ்க் டேக்கிங் அபிலிட்டி), மார்க்கெட் பற்றிய அறிவு, பொதுவான நிதி பற்றிய வேட்கை எல்லாம் பொறுத்தே அமையும்!!!
முத்தாய்ப்பா ஜாலியா என் ஸ்டைலில் சொல்லணும் என்றால் "ஐந்தாவது" வீடுங்க உங்க ஜாதகத்துல சும்மா நச்சுனு இருக்கோணும்!!! அவ்வளவு தான் பூந்து விளையாடலாம்.
வேணும்னா நம்ம டிரம்ப்(4 உம் ), Buffett, கேட்ஸ் ஜாதகத்தை அலசவும்....
சரி சரி சரி அடிக்க வராதீங்க பாவம் நானு....உளவியல் வந்தால் இதுவும்(ஜாதகமும்) வரும்.
0 $type={blogger}:
கருத்துரையிடுக