அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
நமது தமிழர்களை பொறுத்தவரை பழங்காலத்திலிருந்தே மாதங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.
தமிழ் மாதங்கள் மொத்தம் 12 ஆகும். பண்டைய தமிழர்கள் இரண்டு வகையாக மாதங்களை குறித்து வந்துள்ளார்கள். பு+மிக்கு சார்பாக சு+ரியனின் இயக்கத்தை வைத்தும், பு+மிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் மாதங்களை கணக்கிட்டார்கள். அவையாவன : சு+ரிய மாதம் என்றும் சந்திர மாதம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் முதலாமானவள் என்ற சிறப்பை பெற்றவள் சித்திரைத் தாய்.
அக்னி நட்சத்திரம் ஆரம்பம் :
சு+ரியனின் ஒளிதான் நம் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் படி சு+ரியனின் அதிஉச்ச காலமான அக்னி நட்சத்திரத்தில் சில சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பார்கள்..

அர்ஜுனன் காண்டவ வனம் எனும் இந்திரனின் வனத்தை எரித்த காலம் அக்னி நட்சத்திரக் காலம் என்றும் சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் சிவாலயங்களில் இறைவனுக்கு தாராபிஷேகம் செய்விப்பார்கள்.
அதன்படி இந்த அக்னி நட்சத்திரத்தில் கத்திரி வெயிலின் போது வீடு கட்ட ஆரம்பிப்பது மற்றும் அதற்கான கிணறு வெட்டுதல், பு+மிபு+ஜை செய்வது, விவசாய விதைப்பு வேலைகள், மரம் வெட்டுதல், குழந்தைகளுக்கு காது குத்தி மொட்டையடித்தல் போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது.
அதேநேரத்தில் கட்டிய வீட்டில் குடிபுகுதல், வாடகை வீடு மாறுதல், நிச்சயதார்த்தம், பெண் பார்த்தல், திருமணம், சீமந்தம், உபநயனம் போன்ற சுபகாரியங்கள் செய்யத் தடையில்லை.
ஜோதிடரீதியாக இது சில விஷயங்களுக்கு தோஷ காலம் எனப்படுவதால் பழமையான சிவன் கோவில்களில் சர்வேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்விப்பது சகல தோஷத்தையும் நீக்கும்.
சித்திரை திருவோண நடராஜர் அபிஷேகம் :
நடராஜருக்கு தேவர்களின் கணக்குப்படி ஆறுகால அபிஷேகமாக ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் செய்வார்கள். அதில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் செய்யப்படும் அபிஷேகம் வருகிற மே 7, 2018 அன்று நடைபெறும். உச்சிகால அபிஷேகமான இதை தரிசித்தால், பிறப்பில்லா பேரின்ப நிலையை எட்டலாம் என்பது ஐதீகம்.

0 $type={blogger}:
கருத்துரையிடுக