சமூக மதிப்பீடுகளும், பொருளாதாரத் தேவைகளும் தரும் அழுத்தங்கள் முற்றிலும் பொருளற்றவை. அதை நோக்கிச் செய்யப்படும் எல்லாக் கணக்கீடுகளும், எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் கண நேரத்தில் உடைந்து சிதறக் கூடியவை, விருப்பத்தில் நிலை பெற்று, ஒப்படைக்கப்பட்ட வாழ்க்கை வாழ்தலே இன்பமான, இயல்பான, நோயற்ற, பாதுகாப்பான, வாழ்க்கைக்கான தீர்வு. வேட்டல் என்பது வெறுமனே இது வேண்டும் என்று கேட்பது அல்ல. வேட்டல் என்பது விருப்பத்தில் நிலைபெறுதல். வேட்டல் என்பதன் பொருளை அனுபவங்களின் வழி மட்டுமே உணர்த்த இயலும். அந்த அனுபவப் பயணத்துக்கு இந்த நூல் இட்டுச் செல்கிறது.
நூலைப் பற்றி:
வேட்டல் என்றால் வேண்டுதல் என்று பொருள். வேண்டுதல் என்பது விரும்புதல் என்பதன் வேறு சொல். எது வேண்டும் எனக் கேளுங்கள்; அது கிடைக்கும். எது வேண்டாம் என்று சிந்திக்காதீர்கள். அந்தச் சிந்தனை உங்களை சிதைக்கும்.இது படைப்பின் மறைபொருள்.
விரும்பியது கிடைக்கும் என்பதைச் சுய நல வெறியின் மந்திரமாகப் புரிந்துகொள்ளக் கூடாது. ’பேராசைகளின் பிடியில் சிக்காதே. உன் அமைதியைக் கெடுத்துக்கொண்டு நீ சேர்க்கும் ஒரு பருக்கைச் சோறும் உனது வயிற்றால் செரிக்கப்படாது’ என்பதுதான் மெய்ப்பொருள். அமைதியற்ற மனம் நோய்களின் சரணாலயம். இலக்குகளால் நிரம்பிய மனம் அமைதியின் பகைக் கூடம்.

0 $type={blogger}:
கருத்துரையிடுக