Tamil Community

பிரண்டை துவையல்

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார்.


உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு!


#முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்......


கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்....
எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம்  அதையே இங்கு செய்தோம் ......

பிரண்டையில் உள்ள மிகையான #சுண்ணாம்பு சத்து(#கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது  குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ......

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு  முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்......

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....

இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....

நல்ல பதிவுகளை பகிர்வோம்
Share:

மழை நீர் உயிர் நீர்!!!

மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம்.

சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது.

உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சலிபிடிக்காமல்,காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள்.
எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள்.

நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும்.

மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும்.

முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடித்துக்கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம்.

இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது.

நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம்.
குழந்தைகள் மலையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம்.

மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும்போது நம்மை ஒரு சினிமா நடிகைபோல் நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மழைநீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து.

எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக வாழ்வோம்.
வாழ்வோம் ஆரோக்கியமாக.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்.....!

Share:

சீரக தண்ணீர் செய்முறை


5 லிட்டர் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதில் ஒரே அரை டீஸ்பூன் அளவு சீரகம் மற்றும் என்ணி 8 மிலகு போட்டு ஓர் குழி தட்டு போட்டு (வேர்த்து வடியும் நீர் தண்ணீரில் விழும் படியாக) மூடி வைக்க வேண்டும். இந்த தண்ணீரை குடித்து வர வேண்டும்.
தினமும் புதியதாக செய்துக் கொள்ளவும். மாதம் 15 நாட்கள் மட்டும்.

BP மற்றும் கொழுப்பு கட்டுக்குள் வரும்.
சமையலில் சீரகம் உபயோகிகின்றோமே தனியாக ஜீரக தண்ணீர் குடிக்க வேண்டுமா என்ற நியாமான நினைப்பு ஏற்ப்படுவது இறக்கையே!. மேற்கண்ட செயல் முறை விளக்கத்தில் சீரகம் மிதமான வெப்பத்திற்கு உட்ப்படுத்தப் படுவதை பார்க்கின்றோம், இதே சமையலில் பயன்படுத்தும் போது நமக்கு தேவையான மருத்துவ உட்ப்பொருள் (alkaloid) குழம்பு கொதிக்கும் போது ஆவியாகி வெளிப்பட்டு விடும் என்பதே உண்மை. அதலால் நுணுக்கமரிந்து பயன்படுத்துவது நற்பலனளிக்கும்.


வாயு தொல்லை 

பெரும்சப்தத்துடன் ஏப்பம் விடுபவர்களை காண முடிகிறது. நமக்கு அருவெறுப்பு, சிறிது கூட நாகரிகம் இல்லாமல் இப்படி பொது இடத்தில் ஏப்பம் விடுகிறாரே என்று. ஆனால் ஏப்பட்ம் விட்டவர் புத்திசாலி. ஆயுர்வேதத்தின் உபதேசங்களை நன்கு அறிந்திருக்ககக்கூடும். பெரும் சப்தத்துடன் விடுவது தவறுதான் என்றாலும் ஒரு இயற்கையான உபாதையை தடுக்காமல் ஏப்பத்தை நன்கு வெளியே விட்டுவிட்டதால் வாயுத் தொல்லைகள் அவருக்கு வராமல் தன்னை பாதுகாத்துக் கொள்கிறார். இதே நபர் வரும் ஏப்பத்தை தடுக்கக்கூடிய வழக்கத்தை கொண்டிருந்தால் அவருக்கு கீழ்காணும் உபாதைகள் வரக்கூடும்.

1.ருசியின்மை
2. உடல்நடுக்கம்
3. ஹ்ருதயத்திலும், நெஞ்சிலும் வாயுப்பிடிப்பு
4. வாயுவினால் வயிறு பெருத்தல்
5. இருமல்
6. விக்கல்.

தண்ணீரில் சிறிது சீரகத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் தோஷங்கள் அகலும்..

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப் படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!

Share:

தொப்புளில் எண்ணை போடுங்கள்!!!

நமது தொப்புள் (நாபி) கடவுள் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.
















62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டுதான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப் போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

அறிவியல் படி,
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள்  பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக் கொடியுடன் இணைகிறது.

நமது தாயின் இணைப்பான தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!

அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள்  3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள்  அமைக்கப்பட்டுள்ளது.

நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா?  நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இரு முறை சுற்றளவுக்கு சமம் ஆகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

*கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*முழங்கால் வலி*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?*

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால்  இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக  செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தைக்கு வயிற்று வலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

*முயற்சியுங்கள். இப்படி முயற்சி செய்வதில் உடலுக்கு எந்த ஒரு கெடுதலும் நிச்சயம் இல்லை!*


Share:

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்